2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

சிறுவனின் உள்ளாடையை கழற்றிய இருவருக்கு பிணை

Editorial   / 2024 டிசெம்பர் 09 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

11 வயது சிறுவனின் உள்ளாடையை கழற்றி, அச்சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், 16 மற்றும் 18 வயதான இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், வெல்லவாய அம்பகமுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.  

கைது செய்யப்பட்ட இருவரும் வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (08) ஆஜர்படுத்தப்பட்ட போது, அவ்விருவரையும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

11 வயதான அந்த சிறுவன், அந்த காலனியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, 16 மற்றும் 18 வயதுகளையுடைய இருவர், அந்த சிறுவனின் உள்ளாடையை கழற்றி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளனர். தனக்கு நேர்ந்ததை அச்சிறுவன், தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர்,  அவ்விருவரையும் கைது செய்த அம்பகமுவ பொலிஸார், அவர்களை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .