2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சிறுமியை கர்ப்பிணியாக்கிய சிறுவன்

Freelancer   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகமுவ பிரதேசத்தில் 14 வயது சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய 15 வயது மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவிக்கு இணையவழி கல்விக்காக பெற்றோர் வழங்கிய கையடக்கத் தொலைபேசியில் இருந்து இணையத்தில் ஆபாசப் படங்களை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில்   தெரியவந்துள்ளது.

தனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, முல்லேரியா வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்று முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

குறித்த மாணவனின் பெற்றோர்கள் சில மாதங்களுக்கு முன் கல்வி நடவடிக்கைகளுக்காக 27,000 கொடுத்து கையடக்கத் தொலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது

சந்தேகத்திற்குரிய மாணவனிடம் நடத்திய விசாரணையில், அந்த தொலைபேசியில் ஆபாச காணொளிகளை பார்வையிட்டதாகவும், குறித்த சிறுமியிடம் அவ்வாறான முறையில் நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு வந்ததாக  பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியும் மாணவனும் இவ்வாறு நடந்து கொண்ட போதிலும், இருவருக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாக தெரியவரவில்லை என விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் உள்ள குழந்தை நன்றாக உள்ளது என
 மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 15 வயது மாணவன் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .