Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 மே 22 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்யாண வீட்டில் விருந்தினர்களை கவரும் வண்ணம் பல்வேறு விஷயங்களை மணமகன், மணப்பெண் வீட்டிற்கு ஏற்பாடு செய்கின்றனர். அதில் சாப்பாடு மிகவும் முதன்மையாக இருக்கிறது. இதைத் தாண்டி ஸ்நாக்ஸ் விஷயங்களும் கவனம் ஈர்க்கின்றன. பெங்களூருவில் சமீபத்தில் நடந்த கல்யாணத்தில் ஸ்மோக் பான் என்ற உணவுப் பொருளை வைத்துள்ளனர். கிட்டதட்ட ஸ்மோக் பிஸ்கட் எப்படி வினையாற்றுமோ? அதுபோலத் தான் இதுவும்.
வாயில் போட்டு மெல்லத் தொடங்கியதும் புகை வர ஆரம்பித்துவிடும். அதை வெளியில் விடும் போது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஆனால் இதன் பின்னால் விபரீதங்கள் நிகழும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் கூட ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவன் வலியால் துடித்த வீடியோ வைரலாகி பரபரப்பை கிளப்பியது. சில ஆண்டுகளுக்கு முன்பு குருகிராமில் திரவ நைட்ரஜன் கலந்த காக்டெய்ல் அருந்திய நபரின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன. தோல் வேறு மாதிரியாக மாறியது.
இந்த வரிசையில் பெங்களூரு சம்பவம் ஒருபடி மேலே சென்று அதிர்ச்சி அளித்துள்ளது. ஹெச்.எஸ்.ஆர் லே அவுட்டில் கல்யாண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட ஸ்மோக் பான், அதாவது வெற்றிலையுடன் கூடிய பதார்த்தம் வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த சிறுமி ஒருவர் ஆர்வத்துடன் வாங்கி வாயில் போட்டு மென்றுள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் வலியால் துடித்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் பதறிப் போய் நாராயணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றனர். அங்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. வயிற்றில் ஸ்கேன் செய்து பார்க்கும் போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. சிறியதாக ஓட்டை ஒன்று இருந்துள்ளது. 4*5 சென்டிமீட்டர் அளவிற்கு ஓட்டை இருந்ததாக கூறியுள்ளனர்.
இது எப்படி வந்தது என்று ஆராய்ந்தால் அதிகப்படியான திரவ நைட்ரஜன் உள்ளே சென்றதால் வயிற்றை துளை போடும் அளவிற்கு நிலைமை சென்றிருக்கிறது. இதற்கிடையில் சிறுமியின் உடல்நிலை மோசமடைவதை பார்த்த மருத்துவர்கள், உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இதில் வயிற்றில் சிறிய பகுதியை வெட்டி எடுத்துள்ளனர். இதையடுத்தே சிறுமி உயிர் தப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago