2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிறுமி பலாத்காரம்: 3 முதியவர்கள் கைது

Mayu   / 2024 ஜூலை 24 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

13 வயது சிறுமி 3 முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவின் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

குறித்த சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (21) பாடசாலை விடுமுறை என்பதால் சிறுமியை வீட்டில் இருத்திவிட்டு தாய் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, அவரது வீட்டிற்கு சிலர் வந்து சென்றதாகவும், அது பற்றி சிறுமியிடம் விசாரிக்கும்படியும் அக்கம், பக்கத்தினர் கூறியுள்ளனர். இது பற்றி சிறுமியின் தாய், அவரிடம் விசாரித்துள்ளார்.

அப்போது ராஜேந்திரன் (வயது 65), பன்னீர்செல்வம் (76), சின்னத்தம்பி (70) ஆகியோர் தன்னை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அந்த சிறுமி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த 3 முதியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .