2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிகரெட்டுகளை கடத்த முயற்சி; ஒருவர் சிக்கினார்

J.A. George   / 2025 மார்ச் 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரி செலுத்தாமல் கொண்டு வரப்பட்ட 9400 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

43 வயதுடைய குறித்த சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் 9400  சிகரெட்டுகள் கொண்ட 47 அட்டைப்பெட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

யட்டியன பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபரிடம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .