Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்கலைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள், சஹரானைப் போல தாடி மற்றும் தலைமுடி வளர்ப்பதாகவும் இவ்வகையான மாணவர்களை 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் மிஹிந்தல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாகஹங்குனவவே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
புத்தரின் தர்ம சிந்தனைகளைப் பின்பற்றாமல் தலிபான்கள் லெனின் கோட்பாட்டை பின்பற்றுவதுபோல இவர்கள் பின்பற்றுகின்றனர் என்றார்.
விசேட மற்றும் பொது பட்டம் பெறும் இரு வகையான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதாகவும் அவர்களை 3 அல்லது 4 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேற்றும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதே சட்டத்தை பிக்கு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், சஹரான் என்ற நபர் தாடியுடன் இறந்ததாகவும் அதன் பின்னர் பலர் சஹாரானைப் போல தாடி வளர்க்க ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களில் உள்ள பிக்கு மாணவர்கள் மற்றும் பௌத்த துறவிகள், தலைமுடி மற்றும் தாடியை வளர்க்கத் தொடங்கியுள்ளதாகவும் .பௌத்த பாலி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பயிலும் கலைப் பீட பிக்கு மாணவர்கள் தாலிபான்கள் போன்று செயற்படுகின்றனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
3 hours ago