2025 மார்ச் 26, புதன்கிழமை

சஹ்ரான் குழு: நால்வரையும் ஆஜர்படுத்த உத்தரவு

Editorial   / 2025 மார்ச் 25 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

வவுணதீவில் இரு பொலிஸாரை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும்  கொலை செய்த, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் குழுவைச் சேர்ந்த நான்கு பேரையும் எதிர்வரும் ஜூன் 25 ம் திகதி ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி   திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.

வவுணதீவு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சாவடியில்  2018ம் ஆண்டு 29 ஆம் திகதி  இரவு கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன்ட் நிரோசன் இந்திர பிரசன்னா,   பொலிஸ் ​கான்ஸ்டபிள் தினேஷ் ஆகிய இரு பொலிஸார் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ்  சேர்ந்த சஹ்ரானி குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் சஹ்ரானின் சாரதியான முகமது சர்ப் ஆதம்லெப்பை, மில்ஹான், பிரதோஸ். நில்காம் ஆகிய 4 பேரையும் சிஐடியினர் கைது செய்தனர்

இதையடுத்து 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர் இந்த வழக்கு திங்கட்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பில் இருந்து இந்த நால்வரும் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X