2025 ஜனவரி 01, புதன்கிழமை

சலோச்சன கமகே உள்ளிட்ட 6 பேர் விளக்கமறியல்

Mayu   / 2024 டிசெம்பர் 29 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட 6 பேர் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

டொரிங்டன் அவினியூ பகுதியில் அமைந்துள்ள காணியொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைத்த பின்னர் அந்த காணிக்கான நட்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக சந்தேகநபர்களினால் இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X