2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் பலி

Freelancer   / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மகளும் தாயும் செல்ஃபி எடுக்கச் சென்ற போது ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு வந்த இவர்கள், அனுராதபுரம் நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதிவேக ரயிலின் முன் செல்ஃபி புகைப்படம் எடுக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X