2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

சிறுவனின் பிறப்புறுப்பை கடித்த நாய்

Freelancer   / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி தேசிய வைத்தியசாலையில் ஏழு வயதுடைய சிறுவன் நீர் வெறுப்பு நோயால் இன்று (27) உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வீட்டில் வளர்த்து வந்த நாய் சிறுவனின் பிறப்புறுப்பு பகுதியை கடந்த மாதம் கடித்துள்ளதாகவும், பின்னர் சிறுவன் இது குறித்து வீட்டாரிடம் எதுவும் கூறாமல்,  கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

பின்னர் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததை் தொடர்ந்து, சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் கடந்த 24ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 

பிரேத பரிசோதனையின் பின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X