2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

சிறைச்சாலைக்குள் கொலை

Freelancer   / 2025 ஏப்ரல் 04 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், கைதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பி. தெரிவித்தார். 

இந்தக் கொலை தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குறித்த கைதி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சக கைதி ஒருவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் புஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இறந்தவர் நந்தகுமார் சிவா நந்தன் என்ற 46 வயது கைதி ஆவார்.

 அவரது உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும், கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாகவோ அல்லது போதைப்பொருள் கடத்தல் பிரச்சினை காரணமாகவோ இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X