2024 டிசெம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

சீரற்ற காலநிலை: உயிரிழப்பு உயர்வு

Freelancer   / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.
 
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம், சீரற்ற காலநிலையையடுத்து, ஏற்பட்ட அனர்த்தங்களால் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
 
அத்துடன், 142,624 குடும்பங்களைச் சேர்ந்த 479, 871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X