2025 ஜனவரி 25, சனிக்கிழமை

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதானி குழுமம்

Freelancer   / 2025 ஜனவரி 24 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கை பின்வருமாறு...

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை. இத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகிறோம். மே 2024இல் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை மறு பரிசீலனை செய்ய ஜனவரி 2, 2025 அன்று இலங்கை அமைச்சரவை எடுத்த முடிவு, குறிப்பாக ஒரு புதிய அரசாங்கத்துடன், அவற்றின் தற்போதைய முன்னுரிமைகள் மற்றும் எரிசக்தி கொள்கைகளுடன் விதிமுறைகள் ஒத்துப்போவதை உறுதி செய்வதற்கான மறுஆய்வு செயல்முறையின் ஒரு பகுதியாகும். இலங்கையின் பசுமை எரிசக்தி துறையில் 1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அதானி தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X