Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 31 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் சயனைட் அருந்தி நகைத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று திங்கட்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தரும் அவரது மகனும் கன்னாதிட்டிப் பகுதியில் உள்ள நகை செய்யும் இடத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மேற்படி நபர் நேற்று வேலைக்காகச் சென்றிருந்தார். பின்னர் மகன் வேலைக்குச் சென்றபோது அங்கு தந்தை மயக்கமடைந்து இருந்ததை அவதானித்தார்.
குறித்த விடயத்தைத் தாய்க்குத் தெரியப்படுத்திய மகன், தாயை அழைத்து மயக்கமடைந்த தந்தையை யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சயனைட் அருந்தியதால் அவரது மரணம் சம்பவித்துள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
02 Jan 2025
02 Jan 2025