Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 17 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
வீடொன்றில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 71 ஏ மல் 15 வீதி புளொக் மேற்கு-2 பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பக்கீர் முகையதீன் றோஜான் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (16) இரவு 10.45 மணியளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதுடன் ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே குறித்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்தள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்பி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் என கூறப்படும் சந்தேக நபரான சகோதரரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த துப்பாக்கி பிரயோகம் சகோதரர்களிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago