2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சாமரவின் வழக்கு நண்பகல் 12 மணிக்கு வருகிறது

Editorial   / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக, அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்திரதிஸ்ஸ,  கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தார்.

ஊவா மாகாண சபையின் பெயரில் தேசிய சேமிப்பு வங்கியில் பராமரிக்கப்பட்டு வந்த ஆறு நிலையான வங்கிக் கணக்குகள் திரும்பப் பெறப்பட்டதாகவும், இதனால் ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தாக்கல் செய்த விசாரணையின் போது, ​​கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன.  

அரசியல் காரணங்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட இந்த முறைப்பாடுகளுக்கு சந்தேக நபர் பதிலளிக்கத் தயாராக உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத் தசநாயக்க,  சிறைச்சாலைகள் அதிகார சபையினால் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை மதியம் 12 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .