2024 நவம்பர் 14, வியாழக்கிழமை

சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரம்: முறைப்பாடுகள் அதிகரிப்பு

Freelancer   / 2024 நவம்பர் 14 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைதியான முறையில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் இந்த காலப்பகுதியில், சமூக ஊடகங்கள் ஊடாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டமை தொடர்பில் 1,388 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 12ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையிலான காலப்பகுதியில், 747  சமூக ஊடக இணைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன், ஒக்டோபர் 11 முதல் இதுவரையில் மொத்தமாக  2,033 சமூக ஊடகங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டுள்ளன.

 அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள், இனம், மதம், ஆளுமை மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில், 385 பதிவாகியுள்ளன.

மேலும், வெறுப்பு பேச்சு தொடர்பாக 203 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.AN

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .