2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

சபாநாயகரை சந்தித்தார் குயின் போயோங்

Freelancer   / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் துணைத் தலைவி குயின் போயோங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற ஒத்துழைப்பு, நிலைபேறான அபிவிருத்தி, வர்த்தகம், விவசாயம், தொழில்கள் மற்றும் பலதரப்பு ஈடுபாடுகள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நோக்கங்களை அடைவதில் சீனாவின் உறுதிப்பாட்டுடன் உள்ளதாக குயின் போயோங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பரஸ்பர அபிவிருத்தி மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் சீனாவின் தயார் நிலையையும் குயின் போயோங் வலியுறுத்தியுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X