2025 ஜனவரி 24, வெள்ளிக்கிழமை

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்த அமைச்சர்

Freelancer   / 2025 ஜனவரி 24 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் இல்லாத போது சபையில் அமர்வது குறித்து, சபாநாயகர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டதால் பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.

ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் பற்றிப் பேசுகையில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜயதிஸ்ஸவின் ஆசனத்திற்குப் பக்கத்திலுள்ள சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து ஜயதிஸ்ஸவின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதன்போது எழுந்து நின்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா, சபைத் தலைவர் அல்லாத ஒருவர் சபைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அது ஏற்புடையதல்ல, மரபு அல்ல என்று உறுப்பினர் கூறினார்.AN 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X