Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 26 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, கனகராசா சரவணன்
சுனாமி பேபி அபிலாஷ், அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூவிக்கு முன்பாக அஞ்சலியும் செலுத்தினார்.
சுனாமி பேபி அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூவிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது அஞ்சலியை வியாழக்கிழமை(26) செலுத்தினார்.
சுனாமி பேபி என்றழைக்கப்படும் இந்த ஜெய ராசா அபிலாஷ் யார்?
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது 2004.12.26 அன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோல கல்லோலபட்டது.
இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக சுனாமி பேபி 81 எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக மாறினான் இந்த ஜெயராசா அபிலாஷ்.
இந்த குழந்தை தங்களுடையது எனது 09 தாய்மார்கள் போராடினர். பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது. ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.
பின்னர் 52 நாட்களின் பின்னர் ஜெயராசா யுனித்தலா தம்பதியினர் களின் புதல்வனே அபிலாஷ் என நிரூபணமாகியது. பின்னர் அந்த குழந்தை ஜெயராசா யுனித்தலா தம்பதியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் வசித்து வரும் அபிலாஷ் அவரது இல்லத்தில் சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத் தூபி ஒன்றையும்அமைத்து வழிபாடு செய்து வருகின்றார்.
தற்போது 20 வயதுடைய சுனாமி பேபி என அறியப்படும் அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூவிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது அஞ்சலியை பெற்றோருடன் செலுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .