2025 மார்ச் 22, சனிக்கிழமை

சந்திரவெளி படுகொலை : 4 பேருக்கு மரண தண்டனை

Editorial   / 2025 மார்ச் 21 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த  4 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன், வெள்ளிக்கிழமை (21) மரணதண்டனை விதித்து  தீர்ப்பளித்தார். கடந்த 2007ம் ஆண்டு மாச் மாதம் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த  மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை ரி-56 ரக துப்பாக்கியால்  அந்த பகுதியில் இயங்கிவந்த ஆயுதகுழு ஒன்றைச் சேர்ந்தவர்களால் சுட்டு கொல்லப்பட்டார் இச் சம்பவம் தொடர்பாக சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி.கிருஸ்ணரூபன், வ.திருச்செல்வம், கு.பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய 4 பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றில்; வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை (21) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் குறித்த 4 பேரும் குற்றவாளிகள் என இனங்கண்டுகொண்டதையடுத்து அவர்களுக்கு  மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X