2025 மார்ச் 20, வியாழக்கிழமை

சதொசவில் பண்டிகை பொதி

Simrith   / 2025 மார்ச் 19 , பி.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய பொதி 2500 ரூபாய்க்கு வழங்கப்படும்  என  வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு  மற்றும் கூட்டுறவு  அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (19)  இடம் பெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்  குழுநிலை விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக   அத்தியாவசிய உணவுப் பொதிகளை நிவாரண விலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வாழ்க்கைச்   செலவுகள் தொடர்பான குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த ஒதுக்கீட்டை 1500 மில்லியன் ரூபாயாக மாற்றியமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.இதற்கான திருத்தம்  வியாழக்கிழமை(20 )  நிதியமைச்சின் குழுநிலை விவாதத்தில் முன்வைக்கப்படும்.

17 இலட்சம் பேர் அஸ்வெசும  நலன்புரி கொடுப்பனவு பெறுகிறார்கள். 870,000 பேர் நலன்புரி கொடுப்பனவுக்கு புதிதாக  விண்ணப்பித்துள்ளார்கள். சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக  5000 ரூபாய்  பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொதி 2500 ரூபாய் நிவாரண விலைக்கு வழங்கப்படும்.இந்த நிவாரணப்  பொதியில்    நாடு அரிசி 5 கிலோ,  பெரிய வெங்காயம்  2 கிலோ , உருளைக்கிழங்கு 2 கிலோ , பருப்பு ஒரு கிலோ , டின் மீன் ஒன்று, சிவப்பு சீனி 3 கிலோ , கோதுமை மா 2 கிலோ , சமபோசா 2 பெக்கட்,4 சோயா மீட் பெக்கட்  உள்ளடக்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X