2025 மார்ச் 18, செவ்வாய்க்கிழமை

சஞ்சீவ படுகொலை: தலைமை ஜெயிலர் கைது

Editorial   / 2025 மார்ச் 17 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவவை பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து, புதுக்கடை நீதவான நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது கணேமுல்ல சஞ்சீவவின் பாதுகாப்பிற்குப் பொறுப்பாக இருந்த தலைமை ஜெயிலர்,  கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சஞ்சீவா கொலை தொடர்பாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட தலைமை சிறைச்சாலை அதிகாரி கொழும்பு குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு, கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் இரண்டாவது முறையாக வாக்குமூலம் பெற்ற பின்னர் கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X