2025 மார்ச் 01, சனிக்கிழமை

சஞ்சீவ படுகொலை: இதுவரை 12 பேர் கைது

Editorial   / 2025 மார்ச் 01 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொலையைத் திட்டமிட சிம் கார்டுகளை வழங்கியது தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக இவ்விருவருடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .