2025 ஜனவரி 17, வெள்ளிக்கிழமை

சஜித்-ரணில் கூட்டணி இணையும்?

Freelancer   / 2025 ஜனவரி 17 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கான யோசனைக்கு, சமகி ஜனபலவேகவின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில், சமகி ஜனபலவேக கட்சியின் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. 

 

செயற்குழு கூட்டத்தின் பின்னர் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

இதேவேளை, சஜித் பிரேமதாச மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோரின் தலைமையில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கு இரு கட்சிகளைச் சேர்ந்த பலரும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X