2025 ஜனவரி 03, வெள்ளிக்கிழமை

சிகரெட் மற்றும் விஸ்கி கடத்திய வர்த்தகர் கைது

Simrith   / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 மில்லியன் ரூபாய் பெறுமதிமிக்க வெளிநாட்டு சிகரெட் மற்றும் விஸ்கியை கடத்தியதற்காக 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று காலை விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் கொழும்பு 14, பிரின்ஸ் ஒப் வேல்ஸ் வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் வர்த்தக நோக்கத்திற்காக அடிக்கடி விமானப் பயணத்தில் ஈடுபடுபவர்ஆவார்.

அவர் இன்று (டிசம்பர் 31 ஆம் திகதி) அதிகாலை 3:50 மணிக்கு இந்தியாவின் பெங்களூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் (6E-1164) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சந்தேக நபர் ஐந்து பயணப் பைகளுக்குள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் பிராண்டுகளை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், அதே பொதியில் 125 போத்தல்கள் இறக்குமதி செய்யப்பட்ட மது வகைகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் உணவகங்களில் இந்தப் பொருட்கள் விற்பனை செய்யப்படவிருந்தன.

சட்டவிரோதமான முறையில் பொருட்களை இறக்குமதி செய்ததாக வர்த்தகர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் இன்று மகொன நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸ் பொறுப்பதிகாரியின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X