2025 மார்ச் 19, புதன்கிழமை

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு

S.Renuka   / 2025 மார்ச் 18 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உள்ளிட்ட 19 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தமக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (18) காலை 7 மணிமுதல் நாளை புதன்கிழமை (19) காலை 7 மணி வரை அடையாள பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.

அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளான சமன் ரத்னபிரிய மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் திங்கட்கிழமை (17) நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

நிதி அமைச்சினூடாக பிரச்சினையைத் தொழில்நுட்ப ரீதியில் தீர்க்க முயன்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வரவு - செலவுத் திட்டத்தால் ஏற்பட்ட அநீதிக்கு அதிகாரிகளிடம் சரியான பதில்களில்லை, மேலதிக நேரக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை, அரச விடுமுறை கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை, பதவி உயர்வுகள் குறைக்கப்பட்டுள்ளமை, சலுகைகள் தொடர்பாக எவ்வித பதில்களும் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .