Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 19, வியாழக்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகததாச தேசிய விளையாட்டு வளாகத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சுகததாச தேசிய விளையாட்டு வளாகம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு வளாகமாகும், இது தரம் 1 விளையாட்டு வசதிகளை வழங்குகிறது.
400 மீற்றர், 200 மீற்றர் மற்றும் 80 மீற்றர் செயற்கை தடங்களைக் கொண்ட இலங்கையில் உள்ள ஒரே விளையாட்டு வளாகம் இது சர்வதேச தரத்திற்கு ஏற்ப சகல வசதிகளையும் கொண்டது.
2018 ஆம் ஆண்டு செயற்கை தடம் புனரமைக்கப்பட்டது, ஆனால் தற்போது அதில் பல விரிசல்கள் காணப்படுவதால், இது தேசிய மட்ட விளையாட்டுகளுக்கு பொருத்தமற்றது என இலங்கை தடகள சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கை விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு அனுப்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்துடன் சர்வதேச தரத்திற்கமைய இந்த தடத்தை புனரமைப்பது தேசிய முன்னுரிமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், தடங்களை புனரமைத்தல், உதைபந்தாட்ட மைதானத்தை தயார் செய்தல், நேர இயந்திரங்களை நிறுவுதல் மற்றும் மின்விளக்கு கோபுரங்களைப் புனரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள விளையாட்டுத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago