Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Simrith / 2024 நவம்பர் 20 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதல் பார்வைக் குறைபாடுள்ள பாராளுமன்ற உறுப்பினரான சுகத் வசந்த டி சில்வா, கண்ணில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது ,11 வயதில் கிரிக்கெட் விளையாடும்போது கிரிக்கெட் பந்து கண்ணில் தாக்கியதில் தனது ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது என, தனது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் பின்னணியில் உள்ள கதையை, பொதுமக்களுக்கு ஒரு படிப்பினையாக கூற முயன்றார்.
“நான் செய்த முதல் தவறு பந்தைப் பிடிக்க கைகளைப் பயன்படுத்தாததுதான். இரண்டாவது தவறு என்னவென்றால், நான் காயத்தை மறைத்து, அந்த நேரத்தில் அதை என் குடும்பத்தாரிடம் தெரிவிக்கத் தவறியது. இதனால் எனக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டது. கண்ணில் தூசி படிந்தாலும் உடனடியாக கண் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதே பொதுமக்களுக்கு எனது அறிவுரை. இந்த காயங்கள் நீண்ட தூரத்திற்கு செல்ல வல்லன ”என்று அவர் மேலும் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, பார்வைக் குறைபாடுள்ள நபரின் வாழ்க்கை மிகவும் கடினமானது என்றும், இவ்வாறான காயங்கள் புறக்கணிக்கப்பட்டால் இதுபோன்ற நிலையிலிருந்து மீள முடியாது என்றும் எச்சரித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் (NPP) மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
20 minute ago
33 minute ago