Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 ஜூலை 18 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி முகத்திடலில் அமைந்துள்ள 'கோட்டா கோ கம' போராட்டத்தளத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் மூவருக்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவு நிதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ரட்டா என அழைக்கப்படும் ரத்திது சேனாரத்ன, திலான் சேனாநாயக்க மற்றும் அவிஷ்க விராஜ் கோனார ஆகிய மூன்று செயற்பாட்டாளர்கள் கடந்த வாரம் இலங்கை வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் மூன்று புதிய கணக்குகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த மூன்று கணக்குகளிலும் வெளிநாடுகளில் இருந்து 45 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில மணிநேரங்களுக்குப் பின்னர், வங்கிக்கு வந்ததாகக் கூறப்படும் அவர்கள், முழுத் தொகையையும் மீளப் பெற்றதாகவும், பணத்தைப் பெற்றதற்கான காரணத்தை விசாரித்த வங்கி அதிகாரிகளை மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago