Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மாவட்ட வரலாற்றில், நடைபெறவுள்ள பொது தேர்தலுக்காக 14 தமிழ் வேட்பாளர்களை உள்ளடக்கிய சுயேட்சை குழு ஒன்று "கோடரி" சின்னத்தில் போட்டியிட முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் இருந்து இம் முறை 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் பண்டாரகம, ஹொரணை, புலத்சிங்கள, அகலவத்தை மத்துகம, பாணந்துறை, பேருவளை மற்றும் களுத்துறை உட்பட 8 தேர்தல் தொகுதிகளில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இது வரை காலமும் பல்வேறு இடைஞ்சல்களுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் களுத்துறை மாவட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் செறிந்து வாழும் சிறுபான்மையின தமிழ் மக்களின் வாக்குகளை மட்டும் நயவஞ்சகமாக பெற்றுக் கொண்டு அவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார பிரச்சனைகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான விமோசனம் ஒன்றை பெற்றுக் கொள்ளும் வகையில் மேற்படி சுயேச்சை குழு இந்த பொது தேர்தலில் களம் இறங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
களுத்துறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1024,244 ஆகும். இதில் சுமார் நாற்பதாயிரம் அல்லது நாற்பத்து ஐந்தாயிரம் தமிழ் வாக்காளர்கள் இம் முறை பொது தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து வாக்களிக்கும் பட்சத்தில் விகிதாச்சார அடிப்படையில் தமிழ் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு உள்வாங்க கூடிய சாத்திய கூறுகள் காணப்படுவதாக குழு தலைவர் தெரிவித்தார்.
மேலும், செல்வராஜ் விஜேபாண்டியன், குப்புசாமி ஆரோக்கியன், சுந்தரலிங்கம் சிவன் பிள்ளை, கிருஷ்னசாமி சிவகுமார், ராமையா ஸ்ரீ காந்த, நடேஷன் சிவபாலன், நடேசன் உதயகுமார், சிதம்பரம் தேவேந்திர, சுப்பிரமணியம் ரமேஷ், சந்திரஜோதி வினோதா, முத்து திரிச்செல்வம், சின்னசாமி சுப்ராயன், விஜேகுமார் மோனிஷா, சுமதி சுப்ரமணியம் ஆகியோர் மேற்படி சுயேச்சை குழுவில் இம் முறை தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜெயரட்ணம்
,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago