Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஜூன் 25 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட 8 அரச அடுக்குமாடி குடியிருப்புகள் பாரியளவில் பாழடைந்து காணப்படுவதால், அந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அந்த வீட்டுத் தொகுதிகளை இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வகந்த அடுக்குமாடித் திட்டம், பம்பலப்பிட்டி வீடமைப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை வீடமைப்புத் திட்டம், சிறிதம்மா மாவத்தை வீடமைப்புத் திட்டம், கந்தேபுர அடுக்குமாடித் திட்டம், B36 மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டம், ஜி. எச். ஜே. கே. எம். மற்றும் என். மிஹிந்து மாவத்தை வீடமைப்புத் திட்டம் ஆகிய எட்டு வீட்டுத் தொகுதிகள் இவ்வாறான நிலையில் காணப்படுகின்றன.
இந்த வீட்டுத் தொகுதிகளை இடித்துத் தள்ளுமாறு வீடமைப்பு அமைச்சிடம் முன்மொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
54 minute ago
54 minute ago