Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 03 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயில் அண்மையில் நடைபெற்ற வைபவத்தில் துறைமுக நகர முதலீட்டுத் திட்டம் கொழும்பு நிதி நகரம் என பெயர் மாற்றப்பட்டதை அடுத்து, அதில் முதலீடு செய்யும் முதல் முதலீட்டாளர்களாக சீன நிறுவனம் ஒன்றின் நான்கு முதலீட்டாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை திங்கட்கிழமை (02) வந்தடைந்தனர்.
CZK Huarui சர்வதேச கலாசாரம் மற்றும் கலை, சீனாவில் ஒரு மாநில நிறுவனம் (Beijin) நிறுவனத்தின் பொது மேலாளர் திருமதி சோபியா லி (SophiaLi) மற்றும் மூன்று பேர் அடங்குகின்றனர்.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் அண்மைய விஜயத்தின் பின்னர் இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மற்றும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் இந்த முதலீட்டாளர்கள் குழு வந்துள்ளது.
முதற்கட்டமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் மாணிக்க அருங்காட்சியகம், அதனுடன் இணைந்த இரத்தினக்கற் சோதனை ஆய்வு கூடம் மற்றும் இரத்தினக்கற்கள் ஏல மையம் ஆகியவற்றை கொழும்பு நிதி நகரத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் மின்சார வாகனம் ஒன்றுசேர்க்கும் தொழிற்சாலையை நிறுவுவதற்கு மேலும் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்திலும் அமுனுகம இந்த அனைத்து முதலீட்டு திட்டங்களுக்கும் 07 நாட்களுக்குள் தேவையான அனுமதியை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை தயார் செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago