2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது

Editorial   / 2023 செப்டெம்பர் 08 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பங்குவ பிரதேசத்தில் கடந்த (07) இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே பிரதேசத்தில் வசிக்கும் ஐவர் கடந்த (08) பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வெல்லவாய கம்பங்வ பகுதியைச் சேர்ந்த எதிர்வீர ஜெயவிக்ரமபத்பந்தி திலங்க சாமர (வயது 33) என்ற திருமணமாகாத இளைஞனே தலையில் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கட்டை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான ஆரம்ப நீதவான் விசாரணைகள் வெல்லவாய பதில் நீதவான் திருமதி மாலானி தென்னகோனினால் மேற்கொள்ளப்பட்டதுடன் சந்தேகநபர்கள் நேற்றைய தினம்(09)சனிக்கிழமை  வெல்லவாய நீதவான் திரு.சதுர எரந்த திஸாநாயக்க முன்னிலையில் முற்படுத்தப்பட்டு இன்றைய தினம்(10) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுமனசிறி குணதிலக்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .