2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

’கொதிக்கும்’ டெல்லி: 52.3 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவு

Editorial   / 2024 மே 29 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

: தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகபட்ச வெப்ப நிலை இன்று பதிவாகியுள்ளதாக இந்திய வானிலமை மையம் தெரிவித்துள்ளது. டெல்லி முன்கேஸ்பூர் பகுதியில் இந்த அளவுக்கு கடுமையான வெப்ப நிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 49.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் டெல்லியில் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது இதற்கிடையே, இன்று நிலவிய இந்த கடுமையான வெப்ப நிலை காரணமாக டெல்லியில் மின் தேவையும் உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லியின் மின் தேவை இன்று மட்டும் 8300 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இத்தனை மெகாவாட் மின்தேவை டெல்லியில் இதுவரை இருந்ததில்லை. இதுவே முதல்முறை என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .