2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கொடியை பதிவிட்டு கொடிகளை பறக்கவிட்டார்

Janu   / 2024 ஜனவரி 16 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ, கோமரன்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பொறியியலாளர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம்  திங்கட்கிழமை (15) பதிவாகியுள்ளது.

குறித்த நபர் தன் உயிரை மாய்ப்பதற்கு முன்னதாக தனது முகநூல் ( face book ) பக்கத்தில் வெள்ளைக் கொடி ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டதையடுத்து சந்தேகத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்கத்தில் உள்ள அறையொன்றில் உயிரை மாய்த்துகொண்ட   நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபர் உயிரை மாய்த்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கலென்பிந்துனுவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X