Freelancer / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், யாத்ரீகர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயமுற்றனர். இங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டம், கேதார்நாத் நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி, யாத்ரீகர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 5 பேரின் உடலையும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் நீண்ட நேரமாக போராடி மீட்டனர்.
3 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் பக்தர்கள் சிக்கியிருக்கலாம் என ருத்ரபிரயாக் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதுகுறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், “தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், அவ்வழியாகச் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்” என்றார்.
இந்நிலையில், சில தினங்களாக கனமழை கொட்டுவதே நிலச்சரிவுக்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.S
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025