Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஜூலை 20 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை பொறுப்பற்ற முறையில் இறக்குமதி செய்து,சுகாதாரத் துறையை நலிவடையச் செய்து உயிரிழப்புகள் ஏற்படுதலுக்கு காரணமாக அமைதல் என்பனவற்றை காரணமாக் கொண்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தது.
அண்மைய காலங்களில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அவற்றைப் பயன்படுத்தியதால் எமது நாட்டின் மருத்துவமனை கட்டமைப்பில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்தன.
இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அறிவுறுத்திய போதிலும், அதைப் பொருட்படுத்தாது அவசர நிலை எனக் கருதி கொள்முதல் மற்றும் பதிவு செயல்முறைக்கு புறம்பாக மருந்துப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதோடு, இதனால் நாட்டின் பல முக்கிய மருத்துவமனைகளில் உயிரிழப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த உண்மைகளை வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை வியாழக்கிழமை (20) கைச்சாத்திடப்படுகிறது என்றும்,மக்களது வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்திற்கு வந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட வேண்டும் என இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேபோல்,ஒரு நாட்டின் சுகாதாரம் என்பது மக்களின் வாழ்க்கை என்றும்,சுகாதார சீர்கேடு மக்களின் இயல்பு வாழ்க்கை சீர்குலைவதற்கு ஒரு காரணம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
59 minute ago