Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 28 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைக்காவரின் பெயரில், பொரலஸ்கமுவ பிரிவென வீதியில் உள்ள வீட்டுத்தொகுதியில் அதிசொகுசு வீடொன்றை வாடகை அடிப்படையில் பெற்று. சிறைக்காவலருடன் இணைந்து ஹெரோய்ன் போதைப்பொருளை விற்பனையில் ஈடுபட்ட பெருந்தொகை போதைப்பொருள் விற்பனையாளரான ‘படோவிட ஆஷா’ என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என பாணந்துறை வலன மத்திய ஊழல் எதிர்ப்பு செயலணி தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான அந்த பெண்ணின் வீட்டிலிருந்து 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4054 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள், போதைப்பொருள் விற்பனைச் செய்ததன் ஊடாக திரட்டிய 40,700 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
டுபாயில் தலைமறைவாகியிருக்கும் பெரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ‘மர்வின் ஜனா’ என்பவரின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் போதைப்பொருளையே இப்பெண் விற்பனைச் செய்துவந்துள்ளார்.
அந்த பெண் சிறைச்சாலையில் இருந்தபோது அங்கு கடமையில் இருந்த சிறைக்காவலருடன் கூடாத உறவு ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியேறியதன் பின்னர், சிறைக்காவலரின் பெயரில் அதிசொகுசு வீடொன்றை வாடகைக்கு பெற்றுள்ளார். அதற்காக அந்தப் பெண் சிறை காவலருக்கு மாதாந்தம் 40 ஆயிரம் ரூபாவை செலுத்துவதாகவும் விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
7 hours ago