Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதிக்கு 1 மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்க அம்பாறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டு வந்த சட்டத்தரணி பாறுக் ஷாஹீப் என்பவருக்கு ஒரு மாத காலம் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இறக்காமம் முஸ்லிம் விவகார குவாஷி நீதிமன்ற நீதிபதியான சட்டத்தரணி எஸ்.எல். பாறுக் நீதிமன்ற சிறை கூடத்திற்குள் சிறைச்சாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தரின் பொறுப்பிலிருந்த சிறைக் கைதியிடம் சில மாதங்களுக்கு முன்னர் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் மேலதிக ஆலோசனை உரிய தரப்பினரிடம் பெறப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவ்வழக்கு தவணை செவ்வாய்க்கிழமை (01) விசாரணைக்கு எடுக்கப்பட்ட வேளை சந்தேக நபரான இறக்காமம் முஸ்லிம் விவகார குவாஷி நீதிமன்ற நீதிபதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட நிலையில் அம்பாறை நீதிமன்ற நீதவானினால் ஒரு மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இறக்காமம் குவாஷி நீதிமன்ற நீதிபதி தொடர்பில் தாபரிப்பு செலவு பிள்ளை செலவு மோசடி தகாத வார்த்தை பிரயோகம் நிகழ்நிலை பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்டள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
41 minute ago
1 hours ago