2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

குழந்தை வரத்துக்கு வசீகரம் செய்தவரும் காதலியும் கைது

Editorial   / 2023 ஜூன் 19 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தை வரத்தை எதிர்பார்த்து வசீகரம் செய்தபோது, பெண்ணொருவர் மரணமடைந்த சம்பவத்தை அடுத்து, வசீகரம் செய்த பூசாரியும் அவருடைய காதலியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

லக்கல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான இவ்விருவரும் நாவுல பதில் நீதவான ஷாமலி விஜேரத்னவின் உத்தரவுக்கு அமைய எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தை வரம் கேட்டு செய்யப்பட்ட வசீகர பூஜையில் 48 வயதான பெண் மரணமடைந்தார். அந்த வசீகர பூஜையில் 21 இளநீர் பருகக் கொடுத்ததுடன், மஞ்சள் தூளையும் கலக்கி பருகக் கொடுத்துள்ளனர்.

அப்போது அப்பெண் திடீரென சுகயீனமடைந்துள்ளார். அதன்பின்னர் தம்புள்ளை ​வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இதனையடுத்தே வசீகரம் செய்த பூசாரியும் அவருடைய காதலியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .