2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'குடு தானு' சிக்கினார்

Mayu   / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், 'குடு தானு' என்று பிரபலமாக அறியப்பட்டவர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி பிரமுகரான “மாத்தரா கல்பா” என்பவரின் போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்.

இதற்கமைய, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொட பகுதியில்  இன்று (07)  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அதன்படி, 1 கிலோ 50 கிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தமை, இலத்திரனியல் தராசு 12,000 ரூபா பெறுமதியான  போதைப்பொருள் கடத்தியமை மற்றும் தொலைபேசி திருட்டு ஆகியவற்றில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .