2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

’’கிளப் வசந்த நாட்டுக்கே கடனாளி’’

Editorial   / 2024 ஜூலை 18 , பி.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரியவில் சுட்டு படுகொலைச் செய்யப்பட்ட ‘கிளப் வசந்த’ என்றழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளரிடம் ஊடங்களின் முன்னிலையில் வாக்குமூலம் பெற்றார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எவ்விதமான ஒழுக்காற்று நடவடிக்கைகளோ அல்லது விசாரணைகளோ முன்னெடுக்கப்படமாட்டாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  தெரிவித்துள்ளார்.

 

மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையிலான குழுவினர்  சந்தேகநபர் ஒருவரை விசாரணை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டிரான் அலஸ்  “இந்த தவறை மீண்டும் செய்யவேண்டாம் என கடுமையாக தான் எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு தான்  பணிக்கவில்லை என்றார்.

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவரைத் தவிர ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  ‘கிளப் வசந்த’ சுட்டுக்கொல்லப்பட்டபோது, நாடுமுழுவதும் கடன் பட்டிருந்தார். கையில் பணம் இல்லாதவராகவே இருந்தார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கிளப் வசந்த ஆடம்பர வாழ்க்கையை வாழ்வதான காணொளிகள் பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டாலும், அவரது தொழில்கள் வங்குரோத்து நிலையில் உள்ளன, அவர் நாட்டுக்கு கடனாளி எனவும் அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X