2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பலி

Editorial   / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ். தில்லைநாதன்

கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருமால்புரம், வல்லிபுரம் பகுதியில் வியாழக்கிழமை(05) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற குழந்தையே உயிரிழந்தது.

குழந்தை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் பலூனுடன் இருந்து விளையாடி கொண்டிருந்துள்ளது பலூன் உடைந்த நிலையில் கிணற்றில் காணப்படுகிறது.

பலூன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் அதை மீட்க முற்பட்ட போது தவறி விழுந்திருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .