2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கார் மோதியதில் முன்பள்ளி ஆசிரியர் மரணம்

Editorial   / 2023 ஒக்டோபர் 06 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பாதசாரி கடவையில் தனது மகளுடன் பயணித்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து நடந்தவுடன் கார் தப்பிச்சென்றுவிட்டது.

காயமடைந்த 12 வயதுடைய சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகஹவத்த மாவத்தை, பொல்கஸ்ஸோவிட்ட ஹல்பிட்ட பகுதியைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியையான புஷ்பிகா செவ்வந்தி நாகந்தல (வயது 38) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முன்பள்ளி ஆசிரியை பிலியந்தலையில் இருந்து பேருந்தில் வந்து ஹல்பிட்ட பகுதியில் இறங்கி பாதசாரி கடவையை கடக்கும்போது கஹதுடுவவிலிருந்து கெஸ்பேவ நோக்கி சென்ற கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .