2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

காதல் ஜோடியிடம் கப்பம்: 2 பொலிஸார் நீக்கம்

Janu   / 2024 ஓகஸ்ட் 21 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுவெல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் ரூபாய் 10,000 இலஞ்சமாக பெற முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக நுகேகொட பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கான்ஸ்டபிள்கள் இருவரும் 14ஆம் திகதி  மாலை 6 மணி முதல் அடுத்த நாள் 6 மணி வரை மோட்டார் சைக்கிளில் பயணித்து சோதனை நடவடிக்கைகளிள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது முல்லேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திரிகா குமாரதுங்க வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை சோதனையிட்டுள்ளதுடன்  காரில் இருந்த காதல் ஜோடி அநாகரீகமாக நடந்து கொள்வதாக தகவல் கிடைத்தது என கூறி அச்சுறுத்தி அவர்களிடமிருந்து இலஞ்சம் பெற முயற்சித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .