2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

காட்டுக்கோழியுடன் சென்ற இருவர் கைது

Editorial   / 2024 ஜூன் 17 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருந்தில் இடித்து உயிரிழந்ததாக கூறி, இறந்த காட்டுப் பறவையை இரகசியமாக எடுத்துச் சென்ற குற்றத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின்  சாரதியும் நடத்துனரும்,  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து தப்போவ வனவிலங்கு சரணாலயத்தின் ஊடாகச் சென்று கொண்டிருந்த போதே பறவை, பஸ்ஸில் மீது மோதியதாக  தெரிவித்தனர்.

கருவலகஸ்வெவவைச் சேர்ந்த வனவிலங்குப் பாதுகாவலர்கள், சரணாலயத்தின் ஊடாக வேறொரு பணிக்காக பயணித்தபோது, ​​நடத்துனர் மற்றும் சாரதி பறவையை பஸ்ஸில் ஏற்றிச் செல்வதை அவதானித்துள்ளனர்.

சாலியபுர சோதனைச் சாவடியில் பேருந்தை சோதனையிட்ட போது, இறந்த பறவையை ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் அவர்கள் மறைத்து வைத்துள்ளனர்.

ஒரு காட்டுப் பறவையைக் கொன்றதற்காகவும், அப்பறவையின் சடலத்தை ரகசியமாகக் கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்ட அவ்விருவரும்,   தலா 100,000, ரூபாய் பொலிஸ் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் தேசிய பறவை  காட்டுக்கோழி என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .