2025 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

கெஹெலியவின் சொத்து குறித்து மேல் நீதிமன்றம் உத்தரவு

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துகள் தொடர்பான அசல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை அவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 
 
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக, அவர்களின் வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்பீடு போன்றவற்றை முடக்குவதற்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னதாக உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. 
 
எனினும், இது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சார்பாக இன்று மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தரவுகளால் முடக்கப்பட்டுள்ள தங்கள் தரப்பினர்களுக்கு அவர்களது சொத்துகள் தொடர்பான அசல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். 
 
குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, அசல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குமாறு உத்தரவிட்டார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X