2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை - பாக்.திடீர் பல்டி

Freelancer   / 2025 ஏப்ரல் 26 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு பொறுப்பேற்றது. 

தற்போது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிரமாகி வரும் நிலையில் காஷ்மீர் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அமைப்பு திடீரென்று பல்டி அடித்துள்ளது. 

மேலும் இந்திய சைபர் மற்றும் உளவுத்துறை மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை அந்த பயங்கரவாத அமைப்பு முன்வைத்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிஆர்எஃப் எனும் ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

‛‛பஹல்காம் சம்பவத்துக்கும் எங்களுக்கும் எந்த தெடர்பும் இல்லை என்பதை டிஆர்எஃப் சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக எங்கள் மீது குற்றம்சாட்டுவது தவறானது மட்டுமின்றி அவசரமானதோடு காஷ்மீரை அவமதிக்கம் பிரசாரத்தின் ஒரு பகுதியாகும். பஹல்காம் தாக்குதல் நடந்த சிறிது நேரத்துக்கு பிறகு எங்களின் டிஜிட்டல் பிளாட்பார்மில் எங்களால் அங்கீகரிக்கப்படாத ஒரு மெசேஜ் பதிவிடப்பட்டது. இதுபற்றி நாங்கள் ஆடிட் செய்தோம். அப்போது தான் இது சைபர் ஊடுருவல் என்பதை தெரிந்து கொண்டோம். இது இந்தியாவின் டிஜிட்டல் சார்ந்த டேக்டிக்கில் ஒருவகையாகும். இதுதொடர்பாக குறைபாடு தொடர்பாக முழு விசாரணையை நடத்தி வருகிறோம். ஆரம்பகட்ட விசாரணையில் இந்திய சைபர் -உளவு அதிகாரிகளின் சதி இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக இந்தியா இப்படி குழப்பத்தை உருவாக்குவது என்பது இது முதல் முறையல்ல'' என கூறப்பட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .