2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

கழிவு வாய்க்காலில் இருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

Freelancer   / 2025 மார்ச் 27 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பருத்தித்துறை பிரதான வீதி கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள கழிவு வாய்க்காலில் இருந்து இனம் காணப்படாத வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள தேசிய சேமிப்பு வங்கிக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்காலில் நேற்று (26) நண்பகல் சடலம் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் சடலத்தை பார்வையிட்டு  யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X